» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)

கயத்தாறு அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆத்திகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகள் ஸ்ரீ சத்யா (17). திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி., (கணிதம்) முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், அண்மையில் எழுதிய கல்லூரி தேர்வை நன்றாக எழுதவில்லை எனத் தெரிகிறது. 

இதனால் மன வருத்தத்தில் இருந்து அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory