» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடிக்கு ரயிலில் 850 மெ. டன் யூரியா வரத்து
சனி 15, நவம்பர் 2025 8:22:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்துக்கு நடப்பு மானாவாரி, பிசான சாகுபடிக்காக ரயில் மூலம் 850 மெட்ரிக் டன் உரம் நேற்று கொண்டு வரப்பட்டது.
இது குறித்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா. பெரியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 65,000 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர்களின் விதைப்பு பணி நிறைவுற்று, தற்சமயம் மேல் உரம் இட வேண்டிய பருவத்தில் உள்ளது. மேலும் வாழை, நெல்லுக்குத் தேவையான உரங்கள், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நவம்பர் மாத ஒதுக்கீட்டின் படி பெறப்பட்டு வருகின்றன.
அதன்படி, 850 மெ. டன் யூரியா, 220 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் ரயில் மூலம் கொண்டு வரப்பட்டு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், தனியார் உரக்கடைகளுக்கும் பிரித்தனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இது தவிர மற்றொரு நிறுவனத்தில் இருந்து சுமார் 500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் பெறப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சனிக்கிழமை (நவ. 15) விநியோகம் செய்யப்படவுள்ளது.
தற்சமயம் மாவட்டத்தில் 3,000 மெட்ரிக் டன் யூரியா, 2,700 மெ. டன் டிஏபி, 3,200 மெ. டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், உரங்களை தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










