» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது

திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)

கோவில்பட்டி அருகே வாலிபரை அரிவாளால் தாக்கி பணம், பைக்கை பறித்துச் சென்றதாக சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்குமார் (35). தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சிதம்பரபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டனராம். 

அவர் பணம் இல்லை எனக் கூறியதும், அவரை அரிவாளால் தாக்கியதுடன், பைக்கையும், ரூ. 500-ஐயும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். இதில் காயமடைந்த கணேஷ்குமார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து, 16 வயது சிறுவன், மந்திதோப்பு பிள்ளையார் கோயில் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பாண்டிகுமார் மகன் சரவணப்பாண்டி (19), எட்டயபுரம் படர்ந்தபுளியைச் சேர்ந்த பாலச்சந்திரன் மகன் கனகராஜ் (22) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory