» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பிரதான சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 5:08:55 PM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளதை சீரமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்எஸ் முத்து வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி பிரதான சாலையாக தமிழ்ச் சாலை உள்ளது. இதன் வழியாகத்தான் திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. அதுபோல் அம்பேத்கர் சிலை அருகில் தான் திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் திரும்பி திருச்செந்தூருக்கு செல்ல முடியும்.
அங்கு தான் திருச்செந்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்திற்கு மக்கள் காத்திடுப்பார்கள். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் அம்பேத்கர் சிலை அருகே திருச்செந்தூர் ரோடு திருப்பத்தில் மழைநீர் தேங்கி சாலை பழுந்தடைந்து மிக ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை சீரமைக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் படிப்படியாக இந்த பள்ளம் தமிழ்ச் சாலையிலும் விரிவடையும் நிலை உள்ளது.எனவே மாநகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலை துறை நிர்வாகமும் தலையிட்டு பள்ளத்தை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். மேலும், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனடியாக மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட கோரிக்கை..!
திங்கள் 17, நவம்பர் 2025 3:20:00 PM (IST)

அடகு வைத்த நகைகள் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் !
திங்கள் 17, நவம்பர் 2025 3:07:23 PM (IST)

சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)

கார்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
திங்கள் 17, நவம்பர் 2025 11:18:59 AM (IST)

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்ப திமுக இளைஞர் அணி உதவ வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 17, நவம்பர் 2025 11:06:00 AM (IST)

தூத்துக்குடியில் மின்விளக்கு கம்பங்களில் விளம்பர போர்டுகள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 10:58:17 AM (IST)








