» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:57:00 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 22-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் முக்கியமான கந்தசஷ்டி திருவிழா வருகிற 22-ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. 6-ம் திருநாள் வரை பகலில் யாகசாலையில் நடந்த தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 6-ம் நாளான 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் தங்கியிருந்து விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் ஆங்காங்கே தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் பணியும், கடற்கரை மணலை சமன்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory