» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நவதிருப்பதி கோவில்களில் புரட்டாசி கடைசி சனி வழிபாடு : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:37:49 AM (IST)

ரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், இரட்டை திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதற்காக அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கோவில்களில் உள்ள கருடன் சன்னதிகள் முன்பு பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர். தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோவிலில் உற்சவர் நிகரில் முகில்வண்ணன் தேவியர்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையும், விசுவ ரூப தரிசனமும் நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. 

இந்த மாதம் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் பெருமாள் சத்தியநாராயணா அலங்காரத்திலும், 2-வது சனிக்கிழமையில் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், 3-வது சனிக்கிழமை பத்மாவதி தாயார் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதுபோல் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நேற்று திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ சீனிவாச சரவண பெருமாள் கோவிலில் நேற்று காலை 10.30 மணியளவில் சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனைகள் நடந்தது. இரவில் ஆலய வளாகத்தில் உள்ள அக்கினி குண்டத்தில் திரளான பக்தர்கள் எள், எண்ணெய் ஊற்றி வழிபட்டனர். அதை தொடர்ந்து மழை பெய்து விவசாயங்கள் செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory