» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு கியூ.ஆர். கோடு முறை : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்!

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:31:32 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் வாராந்திர ஓய்விற்கு ‘கியூ.ஆர். கோடு முறையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் போலீசாருக்கு வாராந்திர ஓய்வு நடைமுறையில் இருந்து வருகிறது. அதை தொழில்நுட்ப ரீதியாக எளிதாக்கும் பொருட்டு, ‘வீக் ஆப் கோடு’ எனும் புதிய ‘கியூ.ஆர். கோடு’ முறையை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிமுகம் செய்தார்.

இந்த ‘கியூ.ஆர். கோடு’ அனைத்து காவல் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் வைக்கப்படும். மேற்படி கியூ.ஆர். கோடை போலீசார் தங்கள் செல்போனில் ‘ஸ்கேன்’ செய்துகொள்ள வேண்டும்.

அப்போது அவர்களுக்கான வாராந்திர ஓய்வு நாளை எடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி பதிவுசெய்தால், அது நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரியின் ஒப்புதலுக்கு செல்லும். அதனடிப்படையில் போலீசாருக்கு ஓய்வு வழங்கும் வகையில் இந்த கியூ.ஆர். கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி, தூத்துக்குடி மாவட்ட போலீசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory