» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

சாத்தான்குளம் தேவாலயத்தில் ஜாக்கி மூலம் ரேனியஸ் கன்வென்சன் கூட்டம் மேடையை 3 அடி உயர்த்தி அமைக்கும் பணி இன்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தூய ஸ்தேவான் ஆலய வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரேனியஸ் கன்வென்சன் கூட்ட மேடை உள்ளது. தற்போது ஆலயத்தை சுற்றியுள்ள சாலை உயர்ந்து போனதால் மழை காலத்தில் மழை நீர் மேடை சூழ்ந்து பாதிக்கும் நிலை வந்துள்ளது. அதனை இடித்து புதியதாக கட்டாமல் ஜாக்கி மூலம் அதன் அடிப்பகுதியில் 3 அடி உ.யர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மேடை அடிப்பாகத்தை சுற்றி ஜாக்கி அமைத்து உயர்த்தி அமைக்கும் பணியை சேகர குருவானவர் டேவிட் ஞானையா ஜெபித்து தொடங்கி வைத்தார். இதில் திருமண்டல முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் குணசீலன், கிருபாகரன், சேகர செயலாளர் வக்கீல் தியோனிஸ் சசிமார்சன், பொருளாளர் நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பணியில் 20க்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









