» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)
விளாத்திகுளத்தில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காமராஜ் நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (65), இவரது மனைவி முனீஸ்வரி (63). இருவரும் விளாத்திகுளத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த ஒரு லாரி பைக்கை கடந்து சென்ற போது காற்றின் வேகமாக நிலை தடுமாறிய குருசாமி தனது மனைவியுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் லாரியின் பின் டயர் ஏறி இறங்கியதில் முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குருசாமி பலத்த காயம் அடைந்தார். அவர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டிவந்த சாத்தூர் அருகிலுள்ள சத்திரப்பட்டி, ஆனந்தா நகரை சேர்ந்த கந்தசாமி மகன் முத்து மாரீஸ்வரன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








