» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள் அன்னதானத்தில் பங்கேற்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த குருசாமி நாடார் என்ற சமூக சேவகர், வேடநத்தம் கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராகவும், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் பதவி வகித்துள்ளார். அத்தோடு இவர் இக்கிராமத்திற்கும், கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என அக்கிரம மக்கள் இவரை போற்றுகின்றனர்.
மேலும் ஆண்டுதோறும் இவரது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு இல்லத்தில் நடைபெறும் குருசாமி நாடாரின் நினைவஞ்சலியில் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக சேவகர் குருசாமி நாடாரின் வாரிசுகளான 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என சகோதர-சகோதரிகள் 12 பேரும் தற்போது வரை ஒற்றுமையாக இருந்து அவர்களது தந்தை வழியில் பல்வேறு உதவிகள் மற்றும் தானங்கள் செய்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக வேடநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் அப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் வழங்கி அவர்களின் உயர் கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதே போல் இந்தாண்டும் சமூக செயற்பாட்டாளர் குருசாமி நாடாரின் 8-ம் ஆண்டு நினைவு தினமான இன்றும் கடந்த கல்வியாண்டில் அக்கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு தலா 1.5 கிராம அளவில் தங்க கம்மல், தங்க மோதிரம் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
மேலும், இன்று அவரது நினைவு இல்லத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர். இவரது நினைவிடத்தை இந்திய கம்யூனிஸ்டின் மூத்த நிர்வாகி நல்லகண்ணு திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)
