» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் அ.வரதராஜன், கனிமொழி எம்பிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் 12 மற்றும் 14 ஆகிய தினங்களில் பெய்த பெரு மழைக்கு மானாவாரி பயிர்களான உளுந்து, பாசி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி பயிர்கள் கடுமையாக சேதமடைந்து விவசாயிகள் கடும் நஸ்டத்திற்கு உள்ளாளர்கள். நவம்பர் மாதம் பெஞ்சல் புயலுக்கு பாதிக்கப்பட்ட வட மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வருவாய் துறையால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. ஐந்து மாதங்களாகியும் நிவாரணம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படவில்லை. 59 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்து வருகிறார். அடுத்த பருவத்திற்கு கோடை உழவு கூட செய்ய முடியாமல் மிகவும் கஸ்டப்படுகின்றனர். நிவாரணம் பெற்றுத்தர கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் உலக மகளிர் தின விழா: அமைச்சர் கீதா ஜீவன் விருது வழங்கினார்
திங்கள் 9, மார்ச் 2026 11:01:23 AM (IST)

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)








சண்முகவேல் விவசாயி மகன்Jun 14, 2025 - 02:00:19 PM | Posted IP 162.1*****