» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது வரலாற்று கொடுமை: சீமான் பேட்டி
சனி 14, ஜூன் 2025 11:43:51 AM (IST)
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை என்று சீமான் கருத்து தெரிவித்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை. தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் இறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தமிழ்க்கடவுள் முருகனுக்கு தமிழ்மொழியில் குடமுழுக்கு நடக்காது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். முருகனே தமிழ் தான், முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள். எங்கள் சமயம் சைவம். சைவத்தில் இருந்து தமிழை பிரிக்க முடியாது. தமிழில் இருந்து சைவத்தை பிரிக்க முடியாது. முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)








