» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி

திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)



"திருட்டுத்தனமாக யாரும் இணையதளத்தில் படத்தை போடாதீர்கள். அப்படியே போட்டாலும் அதை யாரும் பார்க்காதீர்கள்" என்று நடிகர் சூரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் மாமன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடிகர் சூரி திரையரங்கிற்கு வந்து படம் பார்த்துக் கொண்டிருந்த மக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும்போது இணையதளத்தில் படத்தை வெளியிடுபவர்கள் இது குறித்து யோசிக்க வேண்டும். 

மக்கள் முடிந்த அளவிற்கு இணையதளத்தில் திரைப்படம் பார்க்காதீர்கள். திரையரங்கில் பெரிய ஸ்கிரீனில் பார்க்கும் அளவிற்கு வராது. திருட்டுத்தனமாக இணையதளத்தில் படத்தை வெளியிடுபவர்களுக்கு சொல்கிறேன், 100 கோடி 200 கோடி என்று செலவு செய்து படத்தை எடுத்து அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டு படத்திற்கான ரிசல்ட் எப்படி இருக்கும்? எப்படி வரும்? என்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்கும் படத்தில் நடித்தவர்களும் சரி, தயாரித்தவர்களும் சரி, அந்த வலி பயங்கரம். 



தயவுசெய்து திருட்டுத்தனமாக யாரும் இணையதளத்தில் படத்தை போடாதீர்கள். அப்படியே போட்டாலும் அதை யாரும் பார்க்காதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். புரட்டாவிற்கு பேமஸான தூத்துக்குடியில் போகும்போது அப்படியே இரண்டு பரோட்டாவை தட்டி விட்டுட்டு போக வேண்டியது தான். தூத்துக்குடி பரோட்டா என்றால் இரண்டு தான் சாப்பிடுவீர்களா? என்ற கேள்விக்கு முதல்ல ரெண்டு சாப்பிடுவோம் பிறகு நல்லா இருந்தா 10 பார்சல் வாங்கிட்டு போகும் வழியில் சாப்பிட்டுக் கொண்டே போவோம் என்றார்


மக்கள் கருத்து

NAAN THAANமே 23, 2025 - 08:21:27 PM | Posted IP 172.7*****

ஒரு மாமனா பேசணும், தேட்டர் காரனுக்கு மாமா மாதிரி பேச கூடாது .. டிக்கெட் கொள்ளை விலைக்கு வித்தா பாவம் மனுஷன் என்ன பண்ணுவான்

கருப்பன்மே 20, 2025 - 04:28:02 PM | Posted IP 104.2*****

குசும்பு காரன். Tamilmv பத்தி பேசுறான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory