» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை

திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)

தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்திரி மலையில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நதி நீரை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த கங்கை நதி நீர் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது.

250மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனைப்புகுதல் போன்ற தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) வடக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து

அப்பாச்சிமே 21, 2025 - 08:56:54 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory