» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்
ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)
கோவில்பட்டியில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த வாலிபர் லாரி மோதி பரிதாபமாக இறந்தார்
சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் ராகவன் மகன் பாலாஜி (25), தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று காலை நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து பேருந்தில் புறப்பட்டு இன்று காலை 4மணி அளவில் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினார்.
பின்னர் பழைய பேருந்து நிலையத்திற்கு வருவதற்காக ரோட்டை கடக்க முயன்ற போது திருநெல்வேலியில் இருந்து வெம்பக்கோட்டை சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் காலை 6 மணி அளவில் பரிதாபமாக இறந்தார்
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வெம்பக்கோட்டை ஆலங்குளம் சேர்ந்த காளிமுத்து மகன் சுரேஷ் குமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
