» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 18, மே 2025 10:47:27 AM (IST)
தூத்துக்குடியில் அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்த நிலையில் திடீர் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தூத்துக்குடியில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்றவர்கள் குடைபிடித்து சென்றனர். குளிர்பான கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 4:24:22 PM (IST)

புதிய வருவாய் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை : தமாகா இளைஞர் அணி கோரிக்கை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:23:08 PM (IST)

தூத்துக்குடி - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே பரிந்துரை!
புதன் 18, பிப்ரவரி 2026 4:06:18 PM (IST)

சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 3:51:44 PM (IST)

நடுரோட்டில் கொதிக்கும் எண்ணெய்.. ஆக்கிரமிப்பு பிடியில் விளாத்திகுளம் சாலைகள்: கிராம மக்கள் அவதி!
புதன் 18, பிப்ரவரி 2026 3:22:22 PM (IST)

பாஜக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு!
புதன் 18, பிப்ரவரி 2026 3:14:39 PM (IST)










