» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பூமிபூஜையுடன் பணிகள் தொடக்கம்!
ஞாயிறு 18, மே 2025 10:26:27 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு யாகசாலை பந்தக்கால் நாட்டும் விழா இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற ஜீலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அவ்விழாவிற்கான யாகசாலை பந்தக்கால் நாட்டுதல் மற்றும் பூமி பூஜை செய்தல் நிகழ்ச்சி மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில் இன்று நடைபெற்றது.
மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஆகிய வங்கிகளின் தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திர சேவை மையங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் திருக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.அருள் முருகன், திருச்செந்தூர் நகர் மன்றத் தலைவர் சிவ ஆனந்தி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் திருஞானசேகரன், இணை ஆணையர் (இந்து சமயம்) அன்புமணி, திருச்செந்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், திருசெந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:35:00 PM (IST)

தூத்துக்குடியில் நவீன உடற்பயிற்சிக் கூடம்: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
ஞாயிறு 15, ஜூன் 2025 8:01:00 PM (IST)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)

விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி போட்டி: கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 7:39:05 PM (IST)

தந்தையின் நினைவு தினத்தில் மாணவர்களுக்கு தங்க மோதிரம், தங்க கம்மல் பரிசளித்த வாரிசுகள்
ஞாயிறு 15, ஜூன் 2025 7:34:38 PM (IST)

அரசு ஊழியர்களுக்கான கிரிக்கெட் போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 15, ஜூன் 2025 12:04:59 PM (IST)
