» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை!
சனி 26, ஏப்ரல் 2025 9:13:57 AM (IST)
தூத்துக்குடியில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆபரேசன் சஜாக் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் கடல்வழியாக நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கடலோர பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கடல்வழி மற்றும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக அவ்வபோது அனைத்து பாதுகாப்பு துறைகளையும் ஒன்றிணைத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆபரேசன் ரக்சக், ஆபரேசன் சுரக்சா, ஆபரேசன் பேரிகார்டு, ஆபரேசன் ஹம்லா, ஆபரேசன் சாகர் கவாச் போன்ற பெயர்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று மாதம் தோறும் ஆபரேசன் சஜாக் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிது. அதன்படி நேற்று ஆபரேசன் சஜாக் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் கடலோர காவல்படையினர், கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் கடலில் ரோந்து சென்றனர். அப்போது, படகுகளில் சந்தேகப்படும் படியாக யாரும் உள்ளார்களா, படகில் உள்ளவர்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினர். தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளிலும் சோதனை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










