» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
தூத்துக்குடியில் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி உட்பட 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் சகாய குமார் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியாக பணியாற்றி வந்த இவர் ஈஸ்டர் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில், மரடோனா நேற்று முன்தினம் இரவில் தனது நண்பரான கிளிட்டஸ் (28) உள்ளிட்ட 4 பேருடன் திரேஸ்புரத்தில் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆலன் என்பவர் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். கிளிட்டஸ் உள்ளிட்டவர்கள் ஆலனை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஆலன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மரடோனாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற கிளிட்டசுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த மரடோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக தாளமுத்துநகர் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் அப்பு என்ற மதன்குமார் (38), அலங்கார தட்டைச் சேர்ந்த அந்தோணி மகன் ஸ்டீபன் (20), லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த ராபின்சன் மகன் ரெக்ஸன் (20), திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் ஆலன் (31) ஆகிய 4பேரை கைது செய்துள்ளனர். இதில், பிரபல ரவுடியான மதன்குமார் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
சட்டம் தெரிந்தவன்Apr 21, 2025 - 12:19:56 PM | Posted IP 172.7*****
பழைய குற்றவாளிகளை தூக்குத் தண்டனை கொடுக்காமல் இருப்பதே பல கொலைக்கு காரணம். இனி கொலைக்குற்றவாளிகளை தூக்குல போட்டால்தான் தூத்துக்குடி அமைதி பூங்காவாக மாறும். இனி ஆயுள்தண்டனை கொடுக்கும் வழக்கறிஞர்களை செருப்பால் அடிக்க வேண்டும். தூக்குத்தண்டனை தான் சரியான தீர்வு .
மேலும் தொடரும் செய்திகள்

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் : இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)











AajuApr 22, 2025 - 10:36:52 PM | Posted IP 162.1*****