» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 25, மார்ச் 2025 8:40:11 AM (IST)
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்றோ பூபாலராயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு தேர்வுகள் 23.05.2025 முதல் தொடங்குகிறது.
இந்த மே, ஜூன் 2025 தொடக்க கல்வி பட்டயத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க தவறும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு கட்டணமாக கூடுதலாக ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவம், தகுதி மற்றும் பூர்த்தி செய்வதற்கான அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, முதலாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, 2-ம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, பதிவு கட்டணம், சேவைகட்டணம் ரூ.1, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும். ஆகையால் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
