» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
செவ்வாய் 25, மார்ச் 2025 8:25:14 AM (IST)
தூத்துக்குடி பகுதியில் இருவேறு இடங்களில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது போலீசார் செய்தனர்.
தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் சிப்காட் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள டவர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம்(19) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி புதுக்கோட்டை தேரிச் சாலையில் புதுக்கோட்டை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரில் இருந்த தெர்மல் நகரைச்சேர்ந்த ரீகன்(20), மகேந்திரன்(20) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)

அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் த.வெ.க. கட்சி இளைஞர்கள் திமுகவில் ஐக்கியம்!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:54:33 PM (IST)
