» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 50ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மின்வாரிய பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் மாநில பொதுச் செயலாளர் சம்பத்குமார், மாநில துணைத்தலைவர் கீர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுத்துறை நிறுவனமாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் மின்சாரவாரியத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள சுமார் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். துவக்க நிலை பதவியான தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளை டிப்ளமோ படித்த பொறியாளர்களை கொண்டு நேரடி நியமனம் செய்திட வேண்டும். கடந்த 1.12.2023 முதல் மின்சார வாரிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும்.
புதிதாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்கள் ஆளில்லா துணை மின் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த துணை மின் நிலையங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஏராளமான பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
RajaMar 24, 2025 - 08:05:42 PM | Posted IP 104.2*****
பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் நிறைய பேரு சம்பளம் இல்லமல் வேலை பார்த்து வருகின்றனர் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து குறைந்தபட்ச ஊதியம் அரசு வழங்கினால் நன்றாக இருக்கும்
KarthiMar 23, 2025 - 08:47:39 PM | Posted IP 172.7*****
Finance demand is the problem means,increase the current bill.because in one house minimum 3 members used smart phone and recharging monthy above 1000rs.that is not important than current.fill the vacancy first.many unemployed waiting for tneb job.
பாபுMar 23, 2025 - 04:56:37 AM | Posted IP 104.2*****
2004 இல் வேலைக்கு சேர்ந்தேன் அனல் மின் நிலையத்தில் அப்பொழுது எனக்கு சம்பளம் 62 ரூபாய் இப்பொழுது 2025-இல் சம்பளம் பத்தாயிரம் வாங்குகிறேன் சம்பளம் காணவில்லை என்றாவது ஒரு நாள் பணி நிரந்தரப்படுத்துவார்கள் என்ற ஒரு கனவுதான்
மேலும் தொடரும் செய்திகள்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)

Hency PriyaMar 25, 2025 - 09:38:56 AM | Posted IP 162.1*****