» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)
தூத்துக்குடியில் இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக தாமோதரன் நகர் பகுதியில் பழமையான வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தூத்துக்குடி தாமோதரன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவருக்கு அந்தப் பகுதியில் 60 ஆண்டு பழமையான வீடு ஒன்று உள்ளது. நேற்று இரவு கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வந்த நிலையில் மழை பெய்ததை தொடர்ந்து வீடு மோசமான நிலையில் இருந்ததால் சேதமடைந்த வீட்டில் தங்காமல் அருகே உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக சுமார் மூன்று மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து வீட்டிற்குள் விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக ராஜாவின் குடும்பத்தினர் வீட்டில் தங்காததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
