» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது : பைக் பறிமுதல்!!

சனி 22, மார்ச் 2025 3:27:45 PM (IST)

நாசரேத்தில் தனியார் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஸ்டேபிளி தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பேரூராட்சி கவுன்சிலர். இவரது மகள் பெர்சியா நாலுமாவடியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற போது   எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் கிடந்த தங்க நகையை பறிக்க முயற்சி செய்தான். உடனே அந்த ஆசிரியை அவனிடம் போராடினார்.

ஆசிரியை சத்தம் போடவே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து பைக்கில் வந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பைக்கில்  தப்பி சென்று விட்டான். இதுகுறித்து பெர்சியா நாசரேத் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

இந்நிலையில்  நேற்று மாலை நாசரேத் பகுதிகளில் இன்ஸ்பெக்டர் கங்கைய நாத பாண்டியன் தலைமையில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ஐசக் மகாராஜா மற்றும் காவலர் ஜெகநாதன் போலீசார் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வந்தனர். அந்த சமயத்தில் வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது பைக்கை ஓட்டி வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையின் அவர் அணியாபரநல்லூர் வேத கோயில் தெருவைச் சேர்ந்த ராஜபால் மகன் அசோக் (37) என்பதும் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.  அதனைத் தொடர்ந்து நாசரேத் போலீசார்  அவரை கைது செய்து, அவர் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education

New Shape Tailors







Thoothukudi Business Directory