» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பம் அகற்றம் : மின்வாரியம் அதிரடி!

சனி 22, மார்ச் 2025 3:08:57 PM (IST)



நாசரேத்தில் கட்டுக் கம்பியால் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய மின் கம்பம் நாட்டப்பட்டது.
 
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் 2வது தெருவான களஞ்சியம் தெரு பிரதான சாலையில் மிகவும் ஆபத்தான நிலையில் கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பம் இருந்தது. இப் பகுதியில் பிரசித்தி பெற்ற யோவான் பேராலயம், தபால் நிலையம், மெட்ரிகுலேஷன் பள்ளி, துவக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு இந்த சாலை வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், சிறு வியாபாரிகள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் இந்த ஆபத்தான மின்கம்பத்தை கடந்து செல்கின்றனர். 

எனவே பொதுமக்களின் நலன் கருதி நாசரேத் மின்வாரியம் உடனடியாக மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அதிரடியாக பழைய கம்பியால் கட்டப்பட்ட மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை நாட்டினர். புதிய மின் கம்பம் மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory