» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)
தூத்துக்குடியில் மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக அவரது மருமகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் பீட்டர் மனைவி பிரமிளா (54), அந்த பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவரது தங்கையின் மகள் கணவரான லூர்தம்மாள் புரத்தை சேர்ந்த தனபாலன் மகன் அண்டன் (26) என்பவர் மகளிர் சுய உதவி குழு மூலம் ரூ.1லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கினாராம்.
ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் பிரமிளா போன் மூலம் அண்டனிடம் பணத்தை கட்டுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அடைந்த அண்டன் பிரமிளா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறு செய்து அவரை கையால் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தாராம்.
அப்போது வீட்டில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே அங்கிருந்து அண்டன் ஓடிவிட்டாராம். இதில் காயம் அடைந்த பிரமிளா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயந்தி கொலை முயற்சி வழக்குப் பதிந்து, அண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
