» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு: அரசு டாக்டர் சிறையில் அடைப்பு
புதன் 19, மார்ச் 2025 8:05:32 AM (IST)

பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக டாக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பணகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் (48) டாக்டராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் சுமார் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார்.
அப்போது, டாக்டர் பாலச்சந்தர் அந்த பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் மற்றும் போலீசார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பாலச்சந்தர், இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, டாக்டர் பாலச்சந்தரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:12:10 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:35:54 AM (IST)

பைக் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி!
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:32:04 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:14:32 AM (IST)

டோல்கேட்டை சேதப்படுத்தி ஊழியர்கள் மீது தாக்குதல் : தூத்துக்குடியில் பரபரப்பு
திங்கள் 21, ஏப்ரல் 2025 8:09:20 AM (IST)

தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:57:22 PM (IST)
