» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
தூத்துக்குடியில் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன இரவு வாட்ச்மேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் முருகன் (63), இவர் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கம்பெனியில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். இன்று மாலை வேலைக்கு செல்வதற்காக 6.30 மணி அளவில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். எட்டையாபுரம் ரோடு ஜோதி நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு கார் இவரது சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் திருச்செந்தூர் நந்த குமாரபுரத்தை சேர்ந்த கலைச்செல்வன் மகன் ராமநாதன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)








