» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

செவ்வாய் 18, மார்ச் 2025 8:03:24 PM (IST)



மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மேலக்கரந்தையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதால் மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக கடந்த 2023 - 2024-ம் ஆண்டு பாதிப்படைந்து பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டதில் பருத்தி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் தற்போது வரை பயிர் காப்பீடு விடுவிக்கப்படவில்லை என்பதால் அதனையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வெம்பூரில் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறை முழுமையாக கைவிட வேண்டும் என்றும், 

மேலக்கரந்தை காற்றாலை உதிரி பாகம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சுற்றுவட்டார இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலையில் கோட்டூர் விலக்கில் சுற்று வட்டார மக்கள் நலன் கருதி மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும், விளைபொருளுக்கான மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, உளுந்து, பாசி, கொத்தமல்லி, வத்தல் போன்ற பயிர்களுக்கு அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், 

தெலுங்கானா மாநிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைப் போல உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory