» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கூடுதல் விமான சேவை 30ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு

திங்கள் 17, மார்ச் 2025 9:30:03 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கூடுதல் விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.  இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இரு வழித்தடங்களில் நாள்தோறும் 8 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை - தூத்துக்குடி இடையே 12 சேவையாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மார்ச் 30ஆம் தேதிமுதல் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி விமான எண் 6 இ 7193 சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 7.30 மணிக்கும், விமான எண் எஸ்.ஜி. 2963 சென்னையில் இருந்து 6 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 7.40 மணிக்கும், விமான எண் 6 இ 7343 சென்னையில் இருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 8.35 மணிக்கும், விமான எண் 6 இ 7339 சென்னையில் இருந்து 8.55 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 10.35 மணிக்கும் வந்து சேரும். 

இதேபோல் விமான எண் எஸ்.ஜி.2965 பெங்களூருவில் இருந்து 9.55 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 11.45 மணிக்கும்,  விமான எண் 6 இ 7605 சென்னையில் இருந்து 12 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 1.40 மணிக்கும், விமான எண் 6 இ 7735 பெங்களூருவில் இருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 3.55 மணிக்கும், விமான எண் எஸ்.ஜி. 2967 சென்னையில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 3.55 மணிக்கும், விமான எண் 6 இ 7179 சென்னையில் இருந்து 2.25 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு 4.05 மணிக்கும் வந்து சேரும். 

இதேபோல் தூத்துக்குடி இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 9.25 மணிக்கும், 8 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு 9.35 மணிக்கும், 8.55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 10.30 மணிக்கும், 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 12.55 மணிக்கும், 12.10 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 1.45 மணிக்கும், 2 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 3.55 மணிக்கும், 3.55 மணிக்கு புறப்பட்டு பெங்களூருவுக்கு 5.35 மணிக்கும், 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 6 மணிக்கும். 4.55 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு6.30 மணிக்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து

rajamMar 19, 2025 - 05:17:48 PM | Posted IP 162.1*****

super

YESSMar 18, 2025 - 03:44:55 PM | Posted IP 172.7*****

YES - TWO SEPERATE PLACES SCHEDULE TUTY -- CHENNAI, TRICHI --CHENNAI

ManiMar 17, 2025 - 11:28:31 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடிக்கும், திருச்சிக்கும் என திருத்த வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors




Thoothukudi Business Directory