» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் முன்பு போராட்டம்: பாஜக பிரமுகர் கைது!

திங்கள் 17, மார்ச் 2025 3:07:42 PM (IST)



தூத்துக்குடியில் டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்திய பாஜக பிரமுகர் காசிலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். 

டாஸ்மாக் மற்றும் அதனுடன் தொடர்புடைய மது ஆலைகளில் கடந்த 6-ம் தேதி முதல் 3 நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகள் தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பாக, தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அக்கட்சியை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது

இந்தநிலையில், தூத்துக்குடி மார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் முன்பு போராட்டம் நடத்திய பாஜக பிரமுகர் காசிலிங்கம் என்பவரை காவல்துறையினர் கைது செய்து மத்திய பாகம் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors








Thoothukudi Business Directory