» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் போராட அனுமதி அளிக்க கூடாது : ஆட்சியரிடம் கோரிக்கை!

திங்கள் 17, மார்ச் 2025 11:30:04 AM (IST)



தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் போராட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அனுமதி அளிக்க கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு "கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூத்துக்குடி மண்ணையும், மக்களையும் நாசமாக்கியது ஸ்டெர்லைட் நச்சாலைக்கு எதிராக 2018ல் நடைபெற்ற தூத்துக்குடி மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்தின் போது 15 மண்ணின் மைந்தர்கள் தம் இன்னுயிரை ஈந்ததன் விளைவாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து இந்நச்சாலையை மூடியது. 

ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் போட்டு மீண்டும் திறக்க எத்தனித்தபோதும் நீதிமன்றங்கள் உண்மைத் தன்மையை உணர்ந்து இவ்வாலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளன. 

இந்நிலையில் சிறிது காலம் அமைதியாக இருந்த ஸ்டெர்லைட் நச்சாலை நிர்வாகம் தற்போது சில கைக்கூலிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு, மக்களின் ஏழ்மை நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஏராளமான பணத்தைக் காட்டி அவர்களின் மூலம் ஆலை வேண்டும் என கோரிக்கை எழுப்ப முயற்சிக்கின்றது.

மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல்துறையும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் போராட அனுமதி இல்லை என பகிரங்கமாக அறிவித்து தடை போட்ட போதும் ஏழை எளிய மக்களுக்கு பணத்தாசை காட்டி மறைமுகமாக செயலாற்றி வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக அமைதிச் சூழல் நிலவி வந்த தூத்துக்குடியில் பதட்டமான சூழலை உருவாக்கி வருகின்றனர். 

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றனர்.  ஆகவே அரசாலும், நீதிமன்றங்களாலும் தடை செய்யப்பட்டுள்ள இந்த நச்சாலைக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  இதில், சங்கத்தின் பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் -ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, செயலாளர் ராஜா போஸ் ரீகன், நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் பெப்பின், முறாயிஸ் மற்றும் ஷெரான் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

நடராஜன்Mar 19, 2025 - 10:08:48 AM | Posted IP 162.1*****

ஸ்டெர்லைட் ஆலையை பற்றி தவறான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

MuthumariappanMar 18, 2025 - 11:24:23 PM | Posted IP 162.1*****

ஆலை இயங்கினால் மக்களின் வாழ்வாதரம் உயரும்

MuthumariappanMar 18, 2025 - 11:21:05 PM | Posted IP 172.7*****

நல்லா இருக்குடா உங்க நியாயம் ஆலைக்கு எதிரா மக்கள தூண்டிவிட்டு பழிகடா ஆக்குனது நீங்க அத மறந்துட்டு ஆலை ஆதரவாளர் மேல் பழிய போடாதிங்க பாஸ் உங்க பருப்பு இனி தூத்தூத்துக்குடியில் வேகாது அது உளுத்துப்போச்சி தூத்துக்குடியில் ஆலை செயல்பட்ட வேளையில் கஞ்சா விற்பனை நடந்ததா ...இளைஞர்கள் போதைக்கு அடிமை யாய் இருந்தார்களா இதற்க்கு மட்டும் பதில் சொல்லுங்க பாஸ்மம

கண்ணன் 3 வது மைல்Mar 18, 2025 - 01:54:10 PM | Posted IP 172.7*****

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.

செல்வராஜ்Mar 18, 2025 - 06:15:09 AM | Posted IP 104.2*****

இந்த ஆலை இயக்க அனுமதி அளிக்க வேண்டும்

T.Esakki Muthu, PeruraniMar 17, 2025 - 09:59:26 PM | Posted IP 172.7*****

Permanently closed the Sterlite.

வாழ்த்துகள்Mar 17, 2025 - 12:52:15 PM | Posted IP 104.2*****

வேலை இல்லாம பலர் இருக்காங்க ஸ்டெர்லைட் மட்டுமல்ல... மூடப்பட்ட தனியார் அனல்மின் நிலையங்களும் இயக்கப்பட்டால் வேலை வாய்ப்பு கிடைக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory