» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் புதிய கல்லூரி கட்டிடம்: கனிமொழி எம்பி ஆய்வு

ஞாயிறு 16, மார்ச் 2025 1:39:51 PM (IST)



விளாத்திகுளத்தில் புதிய கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக கனிமொழி எம்பி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டிடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் அய்யனார்புரத்திலும், விளாத்திகுளம்- மதுரை சாலை BSNL அலுவலகம் அருகே உள்ள இடத்தினையும் தேர்வு செய்யும் பொருட்டு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட துறை சார்ந்த நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

தமிழ்ப் பேராசிரியர் முதுமுனைவர் மு.ஐயப்பன்,அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல�Mar 17, 2025 - 05:55:35 PM | Posted IP 104.2*****

விளாத்திகுளத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புற ஏழை-எளிய மாணவ-மாணவிகளின் கல்லூரிக் கனவையும்,உயர்கல்வியை மையமிட்ட அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு,குறைவான கல்விக் கட்டணத்தில் பாரபட்சமற்ற பொது நோக்கத்தோடு,தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் விளாத்திகுளத்தில் தொடங்கப்பட்ட அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதியக் கட்டிடம் கட்டுவதற்கு புதிய இடத்தைத் தேர்வு செய்யத் தொடங்கப்பட்ட நடவடிக்கையை பெருமகிழ்வுடன் யாவரின் சார்பிலும் வரவேற்று மகிழ்கிறோம்.இதன் பொருட்டு,போற்றுதலுக்குரிய தமிழ்நாடு அரசிற்கும்,மதிப்பிற்குரியவர்களான மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்,இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்,சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்,மாநகர மேயர்,கோவில்பட்டி வருவாய் கோட்டாச்சியர்,விளாத்திகுளம் வட்டாச்சியர்,பேரூராட்சி விளாத்திகுளம் செயல் அலுவலர்,கழக நிர்வாகிகள்,திருச்செந்தூர் கோவில் இணை ஆனையர் & கல்லூரிச் செயலாளர் உள்ளிட்ட பிற அனைவருக்கும் கல்லூரியின் அனைத்துப் பணியாளர்கள் - மாணவ - மாணவிகள்,சுற்றிலும் உள்ள ஊரார்கள்- கிராமத்தார்கள் சார்பிலும் மிகுந்த நன்றிகளைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory