» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களை தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் கிரிக்கெட் வீரராக உருவாக்கும் வகையில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் தூத்துக்குடியில் சிஎஸ்கே டிடிசிஏ டிராபிக் 2025 என்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் அல்பர்ட் முரளிதரன் தலைமையில், செயலாளர் கிரிஷ்பின் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
டிலைட் பப்ளிக் பள்ளி மைதானத்தில் 20ஓவர் அடிப்படையில் விறுவிறுப்பாக பிப்ரவரி ஏழாம் தேதி முதல் நடைபெற்ற இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சென்ட் ஆன்ஸ் பள்ளி, திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி, கீழ ஈரால் ஆக்சிலியம் பள்ளி, கோவில்பட்டி பிருந்தாவன் கிட்ஸ் யூனிவர்சிட்டி பள்ளி, மேல ஈரால் விஎம்ஏஆர் ஹிந்து நாடார் நடுநிலைப்பள்ளி, சென்ட் ஆண்டனிஸ் மெட்ரிக் பள்ளி, கீதா மெட்ரிக் பள்ளி, ஆறுமுகநேரி கமலாவதி மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி ரவீலா வித்யாலயா உள்ளிட்ட 16 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடின.
இறுதிப் போட்டியில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியும் புனித அன்னாள் பள்ளியும் மோதின. இதில், அழகர் பள்ளி அணி 116 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய புனித அன்னாள் பள்ளி அணி 87 எடுத்தது. 27 ரன் வித்தியாசத்தில் அழகர் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும் வீரர்களுக்கும் டிலைட் பப்ளிக் பள்ளி தலைவர் ஜெயசீலன் தாளாளர் பிரபாகரன் ஜான் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க துணை தலைவர்கள் ஜோன்ஸ் விக்டர், டாக்டர் மகிழ் ஜான் சந்தோஷ், ஒயிட் பீல்டு ஆர்தர், ஜெயசீலன், ராமையா, இணைச் செயலாளர் சுப்பிரமணியன், உதவிச் செயலாளர் சாமுவேல்ராஜ், பொருளாளர் கணேஷ் குமார் செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் முன்னாள் என்னால் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தாமிரபரணி நதிக்கரை கொலைகளின் கூடாரம் : திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு
வெள்ளி 6, மார்ச் 2026 8:57:36 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்!
வெள்ளி 6, மார்ச் 2026 8:39:00 PM (IST)

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:34:10 PM (IST)

தூத்துக்குடியில் சாரண, சாரணியர் சிந்தனை நாள் விழா: 15 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 5:06:07 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கித் தேர்வில் வெற்றி பெற கல்லூரி மாணவர்கள் சிறப்புப் பிரார்த்தனை!
வெள்ளி 6, மார்ச் 2026 4:43:53 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)









