» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கனிமொழி எம்.பி. சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி எம்.பி. இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு இரண்டாவது முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து அவா் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறாா்.
இந்நிலையில், திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்த அவா், நல்லூா், அம்மன்புரம், வள்ளிவிளை, பூச்சிக்காடு, காயாமொழி, நடுநாலுமூலைக்கிணறு, கீழ நாலுமூலைக்கிணறு, நா. முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டேவிட் செல்வின், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)









இருசக்கர வாகனஓட்டி ஒருவன்Feb 17, 2025 - 09:42:51 AM | Posted IP 162.1*****