» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் உயிரிழப்பு!
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:59:31 AM (IST)
தூத்துக்குடி அருகே மனைவி பிரிந்து சென்ற மனவேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கணேசன் (43) கூலி தொழிலாளி. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டில் படுக்கையில் மயங்கி கிடந்தாராம். அவரை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளத்தூர் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:58:40 AM (IST)

கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST)

திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:36:30 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:14:20 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:08:54 AM (IST)

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:41:39 AM (IST)
