» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய மற்றொரு சிறுமியின் உடல் மீட்பு

ஞாயிறு 19, ஜனவரி 2025 10:38:05 AM (IST)

முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மற்றொரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. 

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாக அர்ச்சனன். மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்குளத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தனர். அப்போது அவர்களில் 6 பேர் ஆற்றின் ஆழமான பகுதியில் தத்தளித்தனர். அப்போது அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்த 4 பேரை மீட்டனர். ஆற்றில் மூழ்கிய நாக அர்ச்சுனன் மகள் வைஷ்ணவி (13), அய்யப்பன் மகள் மாரி அனுஷ்யா (16) ஆகிய 2 பேரை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி, அம்பை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் சிறுமி வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து மாரி அனுஷ்யாவை தேடும் பணி இரவு வரையிலும் நடைபெற்றது. ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை.

நேற்று காலையில் 2-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. அப்பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சிறுமி மாரி அனுஷ்யாவின் உடல் மீட்கப்பட்டது. இறந்த சிறுமிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் வெளியூர் சுற்றுலா பயணிகள் குளிக்க செல்லும்போது, ஆழமான பகுதியில் சிக்கி பலியாகும் துயரம் தொடர்ந்து நிகழ்கிறது. எனவே ஆற்றின் ஆழமான பகுதிக்கு யாரும் செல்லாதவாறு எச்சரிக்கை பலகைகள், தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory