» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 4 பேர் கைது

ஞாயிறு 19, ஜனவரி 2025 10:35:52 AM (IST)

தூத்துக்குடியில் மது குடிக்க பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம், 8-வது தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (38). கூலி தொழிலாளி. இவர் தூத்துக்குடி கருப்பட்டி ஆபீஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (47), இனிகோ நகரைச் சேர்ந்த காட்வின் (25), ஜார்ஜ் (24), தாளமுத்துநகர், அலங்காரதட்டைச் சேர்ந்த ஜெயகுமார் (35) ஆகிய 4 பேரும் மதுகுடிக்க பணம் கேட்டனர். 

அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே, 4 பேரும் அவரை அவதூறாக பேசி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மந்திரமூர்த்தி தூத்துக்குடி வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி விஜயகுமார், காட்வின், ஜார்ஜ், ஜெயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory