» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனம் மோதி 6 இரு சக்கர வாகனங்கள் சேதம்!

ஞாயிறு 19, ஜனவரி 2025 10:17:36 AM (IST)



தூத்துக்குடியில் மாநகராட்சி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாலையோரம் நிறுத்தியிருந்த 6 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள பிரதான சாலையோரத்தில் தேங்கியிருக்கும் மணல்களை அள்ளும் வாகனம் மூலம் மாநகராட்சி ஊழியா்கள் ஸ்டேட் வங்கி காலனி 60 அடி சாலைப் பகுதியில் நேற்று காலையில் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் திடீரென சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள், மின்கம்பம் ஆகியவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாம்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் 6 மோட்டார் சைக்கிள்கள், மாநகராட்சி வாகனத்தின் சக்கரங்களில் சிக்கி முழுவதும் சேதமடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடபாகம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த வாகனத்தை அங்கிருந்து அகற்றினர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory