» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் ரெடீமர்ஸ் மாநில மின்னொளி கபடி போட்டி: மோகன் சி லாசரஸ் அழைப்பு

சனி 18, ஜனவரி 2025 10:11:32 AM (IST)

நாலுமாவடியில் கல்லூரிகளுக்கிடையேயான மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி ஜன.22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது. போட்டிகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தொடங்கி வைக்கிறார்.

குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டு துறை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 8ம் ஆண்டு "ரெடீமர்ஸ்" கோப்பைக்கான மாநில அளவிலான தமிழர் திருநாள் மின்னொளி கபடி போட்டி ஜன.22 மற்றும் 23ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. 

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாலை 5.30 மணியளவில் துவங்குகிறது. போட்டிகளில் தமிழகத்தின் தலைச்சிறந்த கல்லூரி அணிகள் பங்கேற்கின்றன. சர்வதேச தரத்திலான "மேட்" தளத்தில் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். முதல் நாள் போட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ்  துவங்கி வைக்கிறார்.

போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரமும், 3 மற்றும் 4ம் பரிசாக தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்படுகிறது. சிறந்த ஆட்டக்காரர்களுக்கு 6 சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 35 பார்வையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory