» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தூரில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா!
வெள்ளி 17, ஜனவரி 2025 8:41:30 PM (IST)

குளத்தூரில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் கட்சி கொடியேற்றி உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அதிமுக கட்சி கொடி கம்பத்தில் கட்சியின் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் கழகக் கொடியேற்றி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். முன்னதாக பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவ படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
