» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு விருது: மத்திய மத்திய வருவாய்துறை வழங்கல்!

திங்கள் 9, டிசம்பர் 2024 8:14:14 AM (IST)



மத்திய வருவாய்புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றிவரும் மூத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரி முரளிக்கு சிறப்பு விருதினை மத்திய வருவாய்துறை செயலர் சஞ்சய் மல்ஹாேத்ரா வழங்கினார்.

இந்தியாவில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கடந்த 1957ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது இந்த புலனாய்வு அமைப்பின் 67ம் ஆண்டு விழா டெல்லியில் சமீபத்தில் நடந்தது. விழாவுக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குநர் எம்கே. சிங் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சுங்க வரிகள் மற்றும் வருவாய்துறை சேர்மன் சஞ்சய்குமார் அகர்வால், ஜிஎஸ்டி உறுப்பினர் செயலர் சஷாங்க் பிரியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சியில் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடல் பகுதியில் இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட ரூ.13 கோடி மதிப்பிலான 21 கிலோ தங்ககட்டிகளை துரிதமாக செயல்பட்டு, கடத்தல் புள்ளிகளை கைது செய்த வழக்கில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த நுண்ணறிவு பிரிவு அதிகாரி முரளிக்கு சிறந்த அதிகாரிக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

ஒன்றிய  வருவாய்துறை செயலர் சஞ்செய் மல்ஹோத்ரா இதனை வழங்கினார். சிறப்பு விருது பெற்ற அதிகாரி முரளிக்கு மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள் வாத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மண்டல மத்திய வருவாய்புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளி. இவர் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருது வழங்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

MOHANDec 9, 2024 - 12:45:30 PM | Posted IP 162.1*****

SUPER

RAJANDec 9, 2024 - 12:44:55 PM | Posted IP 172.7*****

SUPER

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory