» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் விழா!

ஞாயிறு 8, டிசம்பர் 2024 9:36:40 AM (IST)



தூத்துக்குடியில், ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் 342  வார மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. 

தூத்துக்குடி மாநகரில் சுற்றுப்புற சூழலை பாதுகாத்துகாக்கும் வகையில், ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வாரம் தோறும் ஒவ்வொரு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.  இதன்படி இன்று 342வது வாரமான திருச்செந்தூர் பிரதான சாலையில் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் வழக்கறிஞர் மோகன்ராஜ் சாமுவேல் தலைமை தாங்கினார்.

தொழில் அதிபர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக் கன்றுகளை நடும் பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இம்மானுவேல் ஆசீர், செந்தில்குமார், மாறன், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் மருதப் பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பிரசன்னா, கேசவன், பிரவீன், கமல், திருப்பதி, ராஜன், மைக்கேல், பால விநாயகம், உள்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory