» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் அமைச்சர் கீதா ஜீவன்ஆய்வு
செவ்வாய் 12, நவம்பர் 2024 8:17:18 PM (IST)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர்களை உயர்த்தி அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதா ஜீவன்ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில், சென்ற வருடம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால் மருத்துவமனைக்கு மின்சாரம் சப்ளை செய்வது துண்டிக்கப்பட்டது. இதை தவிர்க்கும் வண்ணம் இந்த முறை எல்லா ஜெனரேட்டர்களையும் 5 அடி உயரத்திற்கான அமைப்பை ஏற்படுத்தி அதன் மேல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக்கல் பேனல் இருக்கக்கூடிய தரை தளமானது உயர்த்தப்பட்டு பேனல்கள் நான்கடி உயர்த்தப்பட்டுள்ளது.
பேனல் அறை மற்றும் பேனல்கள் உயர்த்தப்படுவது அமைச்சர் கீதா ஜீவன், நிதியிலிருந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மாலை இந்த பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் டாக்டர் ஜே சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் பெபின், மருத்துவமனை ஜேஇ செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.