» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு
சனி 9, நவம்பர் 2024 8:01:19 PM (IST)
ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான 17 வயதிற்குட்பட்ட 100 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவி சகாய ஜெமியாவை தூத்துக்குடி சவேரியாா்புரம் ஊா் நிர்வாகம் சார்பிலும் புனித சவேரியாா் உயர்நிலைப் பள்ளியின் சாா்பிலும் பங்கு தந்தை குழந்தைராஜன் சந்தனமாலை அனிவித்து வரவேற்றார்.
ஊர் நிர்வாகி பிரான்ஸிஸ் பொன்னாடை அனிவித்தாா். பள்ளியின் தலைமையாசிரியர் மரிய செல்வராணி பூங்கொத்து கொடுத்தார். அனைத்து விளையாட்டுகளுக்கும் உதவிகள் செய்து உறுதுனையாக இருக்கும் ஜான் கென்னடி ராஜன் மாணவியை பொன்னாடை அனிவித்து வரவேற்றாா்.
தொடர்ந்து பள்ளியின் கலையரங்கில் வைத்து பாராட்டு விழா நடைபெற்றது. சாதனை மாணவிக்கு உதவியாக செயல்பட்ட பிரான்சிஸ், செல்வ தினேஷ் மற்றும் அந்தோணி ஜாஸ்மின், ஆசிரியா் பிரான்சிஸ், பயிற்சியாளர் அஜிஷ் மற்றும் அருட்சகோதரிகள் ஊர் மக்கள் அனைவருக்கும் மாணவியின் பெற்றோர்கள் மிக்கேல் பாஸ்கர் சகாயரதி ஆகியோா் நன்றி தெரிவித்தனர்.