» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக் குழு உறுப்பினராக எம்பவர் சங்கர் நியமனம்
சனி 9, நவம்பர் 2024 7:47:09 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினராக எம்பவர் சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் உறுப்பினராக எம்பவர் சங்கரை அரசு சாரா அமைப்பின் பிரதிநிதியாக, தூத்துக்குடி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் நியமனம் செய்துள்ளார்.
தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராக தற்போது பதவி வகிக்கின்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினராகவும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளராகவும், சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார்.
தமிழ்நாடு மூத்தகுடி மக்கள் நல இயக்கத்தின் நிறுவனராகவும் உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றுள்ளார். கடந்த 42 வருடங்களாக சமூக செயல்பாட்டாளராக உள்ளார்.
இவர் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பொறுப்புத் தலைவராகவும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையின் வட்டார தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஐக்கிய நாட்டு சபையில் நடைபெற்ற கூட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்டிரியா, ஸ்லோவோகியா, தென் ஆப்ரிக்கா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, தோகா, ஷார்ஜா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.
நுகர்வோர் ஊற்று, நுகர்வோரே உங்களுக்காக, நுகர்வோர் கையேடு, சுற்றுச்சூழல் கையேடு மற்றும் தாய்ப்பாலே சிறந்தது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் மாநில அளவில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு விருதையும் பெற்றுள்ளார். மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்தால் பல பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். ரோட்டரி சங்கம் உட்பட பல அமைப்புகள் இவரை பாராட்டி கௌரவித்துள்ளது குறிப்பிடதக்கது.
மக்கள் கருத்து
கே.கணேசன்.Nov 10, 2024 - 08:04:52 PM | Posted IP 162.1*****
மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள். தூத்துக்குடி மணியாச்சி இணைப்பு சாலை போக்குவரத்து மற்றும் தூத்துக்குடி விவிடி மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுகிறோம்.
கே.கணேசன்.Nov 10, 2024 - 08:04:37 PM | Posted IP 172.7*****
மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள். தூத்துக்குடி மணியாச்சி இணைப்பு சாலை போக்குவரத்து மற்றும் தூத்துக்குடி விவிடி மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுகிறோம்.
கே.கணேசன்.Nov 10, 2024 - 08:04:54 PM | Posted IP 172.7*****