» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் நிறுத்தம் வேண்டி தூத்துக்குடியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை!

சனி 9, நவம்பர் 2024 4:47:20 PM (IST)



இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகள் இடையே போர் நிறுத்தம் வேண்டி தூத்துக்குடியில் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி 50வது ஆண்டு விழாவில் 50 கோடி ஸலவாத் ஓதி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் செயல்பட்டு வரும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரி 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் மற்றும் மேற்காசிய நாடுகளில் நிலவிவரும் போர் பதற்றம் நீங்க அமைதி நிலவ வேண்டியும் உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு அனைவரும் ஒற்றுமையுடன் வாழ 50 கோடி ஸலவாத் ஓதி இறைவனிடம் அபூர்வ துஆ வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி முதல்வர் இம்தாதுல்லாஹ் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அஸ்ரார் அஹமது அனைவரையும் வரவேற்று பேசினார். பேராசிரியர் தாஜூத்தீன், கிராத் ஓதினார். அரசு காஜி முஜிபுர் ரஹ்மான், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அழிம், இமாம் சதக்கத்துல்லா,: ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் செய்யது அப்துல் ரகுமான், கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டு எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வேண்டும் என கண்ணீர் மல்க அபூர்வ துஆ ஓதினார். 

ஜாமியா பள்ளிவாசல் தலைவர் மீராசா, செயலாளர் ரகுமான், துணைத் தலைவர் சாகுல் சிராஜுதீன், பொருளாளர் இப்ராகிம் மூஸா, அரபிக் கல்லூரி பொருளாளர் சுலைமான், பேராசிரியர்கள் இஸ்மாயில், செய்யது அப்பாஸ், அப்துல் கனி, கிரசன்ட் பள்ளி செயலாளர் முஹம்மது, உவைஸ், பொருளாளர் பீர்முகமது அசிம், ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் ஆடிட்டர் ஜூபைர், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏகே மைதீன் அர் ரகுமான் நற்செய்தி மன்ற செயலாளர் மிராஷா, பொருளாளர் முகமது குட்டி, உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அரபிக் கல்லூரி தலைவர் நவரங் சகாப்தின் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து

வேஸ்ட் கூமுட்டைNov 11, 2024 - 06:25:25 PM | Posted IP 162.1*****

இந்தியா பக்கத்து நாடு வங்காளதேசத்துல இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் அதுக்கு பதில் ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory