» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நிலக்கரி லாரி கவிழ்ந்து விபத்து : டிரைவர் காயம்!

சனி 9, நவம்பர் 2024 3:14:48 PM (IST)



தூத்துக்குடியில் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர் சிறிய காயத்துடன் உயிர்தப்பிானர். 

தூத்துக்குடி துறைமுக சாலையில் அமைந்துள்ள தனியார் அனல்மின் நிலையத்திற்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று இன்று அதிகாலை துறைமுக சாலையில் வந்துள்ளது. இந்த லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் அதிகாலை நேரம் என்பதால் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தூங்கி உள்ளார். 

இதில் சாலையிலிருந்து வெளியே சென்ற  டிப்பர் லாரி சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் லாரியை ஒட்டி வந்த லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதை தொடர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தெர்மல் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory