» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம்: போலீஸ் விசாரணை!
சனி 9, நவம்பர் 2024 12:02:15 PM (IST)
தூத்துக்குடி அருகே எல்லை பாதுகாப்பு படை வீரர் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது : தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் சொக்கலிங்கம் (41). இவர் மத்திய பிரதேசத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.