» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஆன்லைன் 15ம் ஆண்டு சிறப்பு மலர் : அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.
திங்கள் 4, நவம்பர் 2024 10:37:25 AM (IST)

தூத்துக்குடி ஆன்லைன் 15ம் ஆண்டு விழா பொக்கிஷம் சிறப்பு மலரை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டார்.
தென் தமிழகத்தில் முதன் முதலாக தூத்துக்குடி கிஃப்ட் மீடியா நெட்வொர்க் நிறுவனம் சார்பில் டூட்டி ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த இணையதளம் உள்ளூர் முதல் உலகம் வரை அன்றாட நிகழ்வுகளை செய்திகளாக வெளியிட்டு வருகிறது.
தூத்துக்குடி ஆன்லைன் 15ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பொக்கிஷம் என்ற சிறப்பு மலர் வெளியடப்பட்டது. இந்த மலரை தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வளர்ந்து வரும் மீடியா உலகில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் டூட்டி ஆன்லைன் இணையதளம் செய்திகளை வெளியிட்டு முன்னணியில் திகழ்கிறது. தமிழக அரசின் செய்திகள், மாவட்ட நிர்வாக செய்திகள், அரசியல் நிகழ்வுகளையும் நல்லமுறையில் செய்தி வெளியிட்டு வருவது மிகவும் மகிழ்ச்சிக்குறியது.
தூத்துக்குடியில் முதன் முதலாக மக்கள் பேராதரவுடன் துவங்கப்பட்ட கிஃப்ட் மீடியா நெட்வொர்க் நிறுவனம் இன்று நெல்லை, குமரி என்று பரந்து விரிந்து 16ம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு விழாவின் சிறப்பாக தூத்துக்குடி பொக்கிஷம் என்ற சிறப்பு மலரை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தூத்துக்குடி கிஃப்ட் மீடியா நெட்வொர்க் நிறுவனத்தின் செய்திச் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கீதா பள்ளி மற்றும் கல்லூரிகளின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் கல்யாணசுந்தரம், அல்பர்ட், பெருமாள் கோவில் அறங்காவலர் செந்தில்குமார், மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேல், தமிழ்நாடு பத்திரிக்கயாளர் சங்க தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிஃப்ட் மீடியா நெட்வொர்க் நிறுவன தலைவர் தனபால் ஆசீர்வாதம் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
